மத்திய மண்டலச் செய்திகள்
• பலுவாரி, நாசிரிகஞ்ச் மற்றும் நிம்மியாடி ஆகிய பணித்தளங்களில் 693 சிறுவர் சிறுமியருக்கு, ஞாயிறுப் பள்ளிகள் மற்றும் சிறுவர் ஊழியங்களின் மூலமாக கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது; இச்சிறுவர்களின் மூலமாக அவர்களது குடும்பங்களும் கிறிஸ்துவினை அறிய ஜெபிப்போம்.
• பணித்தளங்களில் நடைபெற்ற நற்செய்தி அறிவிப்பின் வாயிலாக புதிதாக 4539 பேருக்கு கிறிஸ்துவின் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
• தாவூத்நகர் பணித்தளத்தில் நடைபெற்ற நற்செய்திப் பவனியில் சுமார் 800 பேர் பங்கேற்றனர். பணித்தள மக்கள் மற்றும் 35 காவல்துறை அதிகாரிகளுக்கு கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் வழங்கப்பட்டு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
• ராம்டிகரா பணித்தளத்தில் நடைபெற்ற கைம்பெண்களுக்கான கூடுகையில் பங்கேற்ற 200 கைம்பெண்களுக்கு, சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு இலவச ஆடைகளும் வழங்கப்பட்டன.
• பஞ்சாரி, ராம்டிகரா, திலௌத்து, சேவஹி மற்றும் தும்பா ஆகிய பணித்தளங்களில் மருத்துவ ஊழியங்கள் மூலமாக நடைபெற்ற வெளிஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார். இவ்வூழியத்தின்போது, சுவிசேஷத்துடன், மருத்துவ ஆலோசனைகளும் ஜனங்களுக்கு வழங்கப்பட்டன.
• ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ரோஹ்தாஸ் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் வேதாகம வகுப்புகளில் 50 வாலிபர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு வேத வசனத்தைக் கற்றுவருகின்றனர்; தேவனுக்கே மகிமை!
• டால்மியா நகர் மற்றும் கப்பர்புட்டி பணித்தளங்களில் ஆலயத்திற்கான நிலம் கிடைக்கவும் மற்றும் விரைவில் ஆலயம் கட்டப்படவும், பிப்ரவரி மாதத்தில் நடைபெறவிருக்கும் கோட்டக் கன்வென்ஷன் கூட்டங்களுக்காகவும், லுக்கா மற்றும் பஞ்ச்மகுல் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் சுகவீனமாயிருக்கும் விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.