மத்திய மண்டலம்
• பௌலியா பணித்தளத்தில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன்
கூட்டங்களில் 800 பேர் பங்கேற்றனர். ஊழியர்கள் சகோ. ராகேஷ் குமார் மற்றும் சகோ. சுரேஷ் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். அத்துடன், தாவூத்நகர் மற்றும் ஹசுபூரா பணித்தளங்களில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களிலும் 108 விசுவாசிகள் பங்கேற்றனர்; இக்கூட்டங்களில், சகோ. சுரேஷ் மற்றும் சகோ. P.C. ஜான்சன் ஆகியோர் தேவ செய்தியளித்தனர்; விசுவாசத்தில் வளரவும், ஊழித்தில் உதவியாயிருக்கவும் விசுவாசிகளை இக்கூடுகை உற்சாகப்படுத்தியது. மேலும், டெஹ்ரி ஆன் சோன் பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டங்களிலும் 300 விசுவாசிகள் பங்கேற்றனர்.
• மார்ச் 3 அன்று படுக்காபுத்வா பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூடுகையில், 150 விசுவாசிகள் பங்கேற்றனர்; இக்கூடுகையில், சகோ. சுரேஷ் மற்றும் சகோ. கில்பட் குமார் ஆசியோர் தேவ செய்தியளித்து, விசுவாசிகளை ஜெபத்தில் வழிநடத்தினர். தொடர்ந்து, மார்ச் 14 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை உச்சைலா பணித்தளத்தில் நடைபெற்ற சிறப்பு உபவாசக் கூடுகையிலும் விசுவாசிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு, ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.
• ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும், ரோஹ்தாஸ் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் வாலிபர்களுக்கான வேதாகம வகுப்பில் 50 வாலிப சகோதர மற்றும் சகோதரிகள் கலந்துகொண்டு விசுவாசத்திலும் வேத அறிவிலும் வளர்ந்துவருகின்றனர்.
• தாவூத்நகர், படிஹானட் டோலா மற்றும் பீஷ்ராம்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார்.
பாடல்கள், வசனங்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின்
அன்பினை சிறுவர் சிறுமியருக்கு அறிவிக்க கர்த்தர் கிருபைசெய்தார்.
• அமிரிடோலா, தாவன்பூர், படியாபாக் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற மருத்துவ ஊழியங்களின் மூலமாக, சரீர சுகத்துடன் சுவிசேஷத்தையும் அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார்.
• பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் வாலிபர் கூட்டங்களுக்காகவும், நவாட்டா மற்றும் திலௌத்து ஆகிய பணித்தளங்களில்
நிலப் பிரச்சனைகள் மாறவும் மற்றும் டால்மியாநகர், ஹஸ்புரா, ராஜ்பூர், ஜோனா மற்றும் கப்பர்புட்டி ஆகிய பணித்தளங்களில் ஆலயத்திற்கான நிலங்கள் விரைவில் வாங்கப்படவும் தாலா மற்றும் திலௌத்து பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஊழியர் இல்லக் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.