மத்திய மண்டலம்
🗣 சல்மா பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் 25 பேர் கலந்துகொண்டு, பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.
🗣 ரோஹ்தாஸ் கோட்டத்திற்குட்பட்ட பணித்தளங்களிலும் மற்றும் ஜெம்ஸ் சிறுவர் காப்பகங்களிலும் நடைபெற்ற விடுமுறை வேதாகம பள்ளி ஊழியங்களின் மூலமாக சிறுவர் சிறுமியருக்கு வேதாகம சிறுகதைகள் மற்றும் சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், ஜெப வாழ்க்கையில் அவர்களை வழிநடத்தவும் கர்த்தர் உதவி செய்தார்.
🗣 ரோஹ்தாஸ் பணித்தள ஆலயத்தில், ஞாயிறு தோறும் நடைபெற்றுவரும் வேதாகம வகுப்புகளில், 50 வாலிப சகோதர மற்றும் சகோதரிகள் பங்கேற்றுவருகின்றனர்.
🗣 ரோஹ்தாஸ் கோட்டத்தின் சடுக்கி, மு-6 மற்றும் சுன்னாகோட்டா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்களின் வாயிலாக 500 பணித்தள மக்களும், கருவந்தியா பணித்தளத்தின் தொலைதூர மருத்துவ ஊழியத்தின் வாயிலாக 52 பேரும் பயனடைந்தனர். மருத்துவ உதவியுடன் சுவிசேஷக் கைப்பிரதிகள் மூலமாக நற்செய்தியினையும் அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார்.
🗣 மே 6 அன்று பஞ்ச்மகுல் பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லம் ஜெபத்துடன் அர்ப்பணிக்கப்பட்டது. சகோ. கோபோர்த் ஜெபத்துடன் ஊழியர் இல்லத்தைத் திறந்துவைத்தார்;. இந்நிகழ்ச்சியில் பணித்தள மக்கள் மற்றும் ஜெம்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.
🗣 சிங்காரியா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் முகாமில், 215 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். பாடல்கள், ஆராதனைகள், குறுநாடகங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வாயிலாக வாலிபருக்கேற்ற வேதாகமச் சத்தியங்கள் அறிவிக்கப்பட்டதுடன், வாலிபருக்கேற்ற வேதாகமச் செய்திகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டு, ஆவிக்குரிய வாழ்க்கையின் வாலிபர்கள் வழி நடத்தப்பட்டனர். கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது.
🗣 டெஹ்ரி ஆன் சோன் பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் 12 பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்கள், ஞாயிறு பள்ளிகள், விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்கள் மற்றும் சிறுவர் நற்செய்திக் குழு ஊழியங்கள் வாயிலாக 1310 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க உதவிசெய்தார்.
🗣 தாராநகர் பணித்தளத்தில் ஆலயம் கட்டப்பட ஏற்ற நிலம் விரைவில் வாங்கப்படவும், பலுவாரி பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், ராய்ப்புரா பணித்தளத்தில் நடைபெற்று வரும் தெபோராள் பயிற்சி மையக் கட்டிடப் பணிகளுக்காகவும், லுக்கா சமுதாய மையக் கட்டிடப் பணிகளுக்காகவும், பணித்தளங்களில் உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும் மற்றும் பணித்தள மக்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.