Translate

June 2026

 

ஜூன் 26 டெஹ்ரி ஆன் சோன் பணித்தள ஆலயத்தில் மே 8 அன்று நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில், டெஹ்ரி ஆன்சோன், டால்மியா நகர் மற்றும் நியூ டிலியான் பணித்தளங்களைச் சேர்ந்த 200 வாலிபர்கள் பங்கேற்றனர். பாடல்கள் ஆராதனை மற்றும் வாலிபர்களுக்கேற்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன், செய்தி வேளையின் போது கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ விடுக்கப்பட்ட சவாலுக்கு பல வாலிபர்கள் தங்களை அர்ப்பணித்தனர். இக்கூடுகையில் பங்கேற்ற வாலிபர்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். 


ஜூன் 27 சடுக்கி, சரோதா, கர்மா, நீர்பூர், நவாடி, ஜமுனா கோவிந்பூர், உன்சைலா, ஜலாலாபாத், பாஸ் கட்டியா, சிவ்பூர், பெலாபூர், சுந்தர்கஞ்ச், பக்னோரா, சால்மா, ஹரியாதிஹ், ஜம்தஹா, கோரியா, பாரா, திஹ், சாலியா, படா லுகா, சோட்டா லுகா, பஹாரு ஆகிய பணித்தளங்களில், சுவிசேஷக் கைப்பதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலமாகவும், தனிநபர் ஊழியங்கள் மூலமாகவும் செய்யப்பட்ட திறந்தவெளி சுவிசேஷ ஊழியங்களின் வாயிலாக, அநேக ஆத்மாக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார். நற்செய்தியைக் கேட்டவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள ஜெபிப்போம். 

ஜூன் 28 தரிஹட் பணித்தள பயிற்சி மையத்தில், நான்காவது அணியினர் தையற் பயிற்சியினை நிறைவு செய்ய கர்த்தர் உதவி செய்தார். டெஹ்ரி ஆன் சோன்  மற்றும் டால்மியா நகர் பணித்தளங்களில் ஆலய ஆராதனைக்கு விரோதமாக செயல்படுவோரைக் கர்த்தர் சந்திக்கவும், தடைகள் நீங்கி விடுதலையோடு மக்கள் கிறிஸ்துவை ஆராதிக்கவும் ஜெபிப்போம்.


ஜூன் 29 டால்மியா நகர், திலௌத்து, படுக்கா புத்வா மற்றும் நவாட்டா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார். அம்பா பணித்தள ஊழியர் இல்லக் கட்டுமான பணிகளுக்காகவும், மத்குபியா, சுவர்மன்வா, நவாடிஹ் பணித்தளங்களில் சுவிசேஷத்திற்கு வாசல்களைக் கர்த்தர் திறக்கவும், பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் ஜெம்ஸ் பகற் பாதுகாப்பு மையங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும், பணித்தளங்களில் சுகவீனம் ஆகவும் மற்றும் தேவைகளுடனும் இருக்கும் சுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.


ஜூன் 30 படுக்கா புத்வா பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பகற் பாதுகாப்பு மையக் கட்டிடப் பணிகளுக்காகவும், ரோஹ்தாஸ் கோட்டத்தில் கல்லறை தோட்டத்திற்கான இடம் கிடைக்கவும், நவாட்டா மற்றும் திலௌத்து பணித்தளங்களில் காணப்பட்டுவரும் நிலப் பிரச்சனைகள் நீங்கவும், புதிதாக ஆராதனையில் கலந்து கொள்ளும் விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.