மே 26 ஏப்ரல் 1, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, ரோஹ்தாஸ் மலையின் கூபா பணித்தளத்திற்கு அருகிலிருக்கும் ரேஹல் கிராமத்தில் நடைபெற்ற திறந்தவெளி கன்வென்ஷன் கூட்டத்தில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர்; இக்கூட்டத்தில், சகோ. கில்பட் குமார் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். இப்பணித்தளத்திற்காகவும், மற்றும் இப்பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் ஆத்தும அறுவடைப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
மே 27 ஏப்ரல் 10 அன்று திலௌத்து பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 150 பேர் பங்கேற்று வசனத்திற்கு ஆர்வமுடன் செவிகொடுத்ததுடன், பல்வேறு ஜெபக் குறிப்புகளுக்காகப் பாரத்துடன் ஜெபித்தனர். தாலா மற்றும் டெஹ்ரி பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகள் தடையின்றி நடைபெறவும், சுனஹட்டா கிராமத்தில் விரைவில் நிலம் வாங்கப்படவும் ஜெபிப்போம்.
மே 28 'ஆயத்தப்படு மற்றவர்களை ஆயத்தப்படுத்து" என்ற கருப்பொருளின் கீழ், நபிநகர் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 50 பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நாசிரிகஞ்ச் பணித்தளத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 36 பெண்கள் பங்கேற்றனர். பட்டனவா டோலா பணித்தளத்தில் சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவின் அன்பில் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். படுக்காபுத்வா பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பகற்பாதுகாப்பு மையக் கட்டிடப்பணிகளுக்காக ஜெபிப்போம்.
மே 29 ஏப்ரல் 14 அன்று டெஹ்ரி ஆன் சோன் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 112 வாலிபர் பங்கேற்றனர். ராஜ்பூர், ரபிகஞ்ச் மற்றும் டால்மியாநகர் பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், கோ பணித்தளத்தில் உண்டாயிருக்கும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.
மே 30 நாசிரிகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற 7 நாட்கள் தொடர் உபவாசக் கூடுகையில் விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் பணித்தள ஊழிங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
மே 31 K-6 பணித்தளத்தில் ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற வேதாகமக் கருத்தரங்கை கர்த்தர் ஆசீர்வதித்தார்; காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இக்கருத்தரங்கில் 60 விசுவாசிகள் பங்கேற்றனர். சுகவீனமாயிருக்கும் விசுhவிகள் விரைவில் சுகம் பெறவும், விசுவாசிகளின் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். ரைவில் ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம்.
