Translate

April 2026

 


ஏப்ரல் 26 'கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 24 பேர் உடன்படிக்கையின் வாயிலாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! ஞாயிறுப் பள்ளி ஊழியங்களின் மூலமாக 120 சிறுவர்களையும் மற்றும் சிறுவர் நற்செய்திக் குழுக்கள் மூலமாக 1051 சிறுவர்களையும் சந்திக்கவும், டெஹ்ரி பணித்தள ஆலய விசுவாசிகள் மூலமாக அயலகத்தாருக்கு சுவிசேஷம் அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். தாலா பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 27 'திலௌக்கர் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் ஜெபக் கூட்டத்தில் 'கடைசி நாட்களின் எழுப்புதல்" என்ற தலைப்பின் கீழ் சகோ. கில்பட் குமார் மற்றும் திருமதி காட்வின் கிளாஸ்டின் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர்; 60 விசுவாசிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்த மாதத்தில், பணித்தளங்களில் நடைபெற்ற மருத்துவ ஊழியங்களின் மூலமாக மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுடன், கிறிஸ்துவின் அன்பினையும் அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். திலௌத்து, நவாட்டா பணித்தளங்களின் நிலப் பிரச்சனைகள் நீங்க ஜெபிப்போம்.  

ஏப்ரல் 28 'மார்ச் 6 அன்று ரோஹ்தாஸ் பணித்தளத்தில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டத்தில், மானு, மு-6, பவுலியா, பஞ்சாரி மற்றும் ரோஹ்தாஸ் பணித்தளங்களைச் சேர்ந்த சுமார் 200 விசுவாசிகள் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்பட்டனர்; இக்கூட்டத்தில், சகோ. சுரேஷ் தேவ செய்தியைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றோரை ஜெபத்தில் வழிநடத்தினார். மார்ச் 12 அன்று பீஷ்ராம்பூர் பணித்தளத்தில்  நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 120 பேர் கலந்துகொண்டனர். 10 மற்றும் 12 வகுப்ப பயிலும் மாணவர்களுக்காக மற்றும் அவர்களது மேற்படிப்பிற்காக ஜெபிப்போம். 

ஏப்ரல்29 'படுக்காபுத்வா மற்றும் துக்கா பணித்தளங்களில் மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தினங்கள் நடைபெற்ற இளைஞர்களுக்கான சிறப்புக் கூடுகைகளில், 550 இளைஞர்கள் பங்கேற்றனர். பாடல்கள் மற்றும் ஆராதனையுடன், இளையோரை ஊக்குவிக்கும் பல்வேறு விளையாட்டுகளைத் தொடர்ந்து, வசனத்திலும் அவர்களை வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். தொடர்ந்து, மு-6 பணித்தளத்தில் மார்ச் 14 அன்று நடைபெற்ற வேதாகமக் கருத்தரங்கில் 10 வாலிபர்கள் பங்கேற்றனர்; சகோ. கில்பட் குமார் வாலிபரை வசனத்தில் வழிநடத்தினார். படுக்காபுத்வா பணித்தளத்தின் பள்ளி கட்டிடப் பணிகளுக்காகவும், சுன்ஹட்டா பணித்தளத்தில் நிலம் விரைவில் வாங்கப்படவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 30 'தன்சா பணித்தளத்தில் மார்ச் 19 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற்ற விசுவாசிகளுக்கான கூட்டத்தில், பணித்தள விசுவாசிகள் 60 பேர் பங்கேற்றனர்; சகோ. கில்பட் குமார் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, 'இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவோம்" என்ற கருப்பொருளின் கீழ், தரிஹட் பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சீஷத்துவப் பயிற்சி முகாமில் 250 விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வரும் நாட்களில் நாசிரிகஞ்ச் பணித்தளத்தில் நடைபெறவிருக்கும் உபவாசக் கூடுகைக்காகவும் மற்றம் விடுதலை கூட்டங்களுக்காகவும் ஜெபிப்போம்.