Translate

August 2026

 




ஆகஸ்ட் - 27 திலௌத்து பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் 65 பெண்கள் உற்சாகமாக பங்கேற்றனர். சகோ. கில்பர்ட் குமார், சகோ. ஹசாங்குல் கான் மற்றும் சகோதரி கிளாஸ்டின் ஆகியோர், பெண்களுக்கேற்ற செய்தி, ஆராதனை, ஆலோசனைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அவர்களை கிறிஸ்துவில் பெலப்படுத்தினர். தேவனுடைய வார்த்தை, ஜெபம் மற்றும் ஐக்கியத்தின் மூலம் ஆவிக்குரிய உற்சாகத்தையும், விசுவாசத்தில் வளர்ச்சியையும், கர்த்தருக்கான அர்ப்பணிப்பில் உறுதியையும் பெண்கள் பெற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்றோர் கிறிஸ்துவுக்கு சாட்சியாக தங்கள் குடும்பங்களிலும் மற்றும் சமுதாயத்திலும் வாழ ஜெபிப்போம்.

ஆகஸ்ட் - 28 K-6 கோட்டத்தில் நடைபெற்ற விசுவாசிகள் கூடுகையில் 130 விசுவாசிகள் கலந்து கொண்டனர்; சகோ. சுரேஷ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலனடையவும், ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளவும், ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்தவும் இக்கூடுகை வழி வகுத்தது. இப்பணித்தள விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும், அவர்களது குடும்பத்தினர் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் - 29 திலோகர் பனித்தளத்தில் நடைபெற்ற உபவாசம் கூடுகையில் 23 விசுவாசிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டம் அனைவருக்கும் ஆவிக்குரிய புத்துணர்ச்சியையும் ஊக்கத்தையும் அளித்தது. ஜூலை 16 அன்று ரோஹ்தாஸ் பணித்தளத்தில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒன்பது பேர், உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினார்; தேவனுக்கே மகிமை! மத்திய மண்டலம் முழுவதும் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், லுகா மற்றும் கோர்ஹான்ஸ் கிராமங்கள் வரை நல்ல சாலைகள் அமைக்கப்படவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் - 30 நாசிரிகஞ்ச் பணித்தளத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற விடுதலைக் கூட்டத்தில் சகோ. ஜோ பால்சன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். முதல் நாள் கூட்டத்தில் 130 பேரும், இரண்டாம் நாள் கூட்டத்தில் 238 பேரும் பங்கேற்று ஆசீர்வதிக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 140 பேர் பங்கேற்றனர்; இக்கூட்டத்தில் சகோ. ஜூடு கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். நௌஹட்டா பணித்தளத்தில் தடைகள் நீங்கி விரைவில் ஆலயம் கட்டப்படும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் - 31 கோஹ் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 63 பெண்கள் பங்கேற்றனர்;. சகோதரி விமலா கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். தேவனுடைய வார்த்தையின்படி ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு வேதாகமப் போதனைகள் வழங்கப்பட்டன. படுக்கையில் வியாதியாயிருக்கும் பணித்தள மக்களின் சுகத்திற்காகவும், கோயியான் கிராமத்தில் மதுபானத்திற்கு அடிமையாய் இருக்கும் ஆண்கள் விடுவிக்கப்படவும் ஜெபிப்போம்.