செப் 26 நபிநகர் பணித்தளத்தில் தெத்தரியா கிராமத்தில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக 100 சிறுவர் சிறுமியர் சந்திக்கப்பட்டனர். ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தினங்கள், ஹஸ்புரா பணித்தளத்தின் மல்ஹரா கிராமத்தில், பப்பட் ஷோ, கதை சொல்லுதல் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் மூலமாக செய்யப்பட்ட சிறுவர் ஊழியங்களின் மூலமாக 83 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கம்ஹரியா பணித்தளத்தின் தெட்ரார் கிராமத்தில் நடைபெற்ற சிறுவர் ஊழியத்தின் மூலமாகவும் 65 சிறுவர் சிறுமியரைச் சந்திக்க கர்த்தர் உதவிசெய்தார். இச்சிறுவர்கள் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் அறிந்துகொள்ளவும், இவர்களது குடும்பங்கள் சந்திக்கப்படவும், இவர்களது கல்வி மற்றும் எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.
செப் 27 கருவந்தியா பணித்தளத்தில் இரு நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூட்டங்களில் 75 விசுவாசிகள் பங்கேற்று தேசத்திற்காகவும், குடும்பங்களுக்காகவும் மற்றும் சபைக்காகவும் ஜெபித்தனர்; சகோ. கமலதாஸ் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார். ஆகஸ்ட் 1 அன்று நாசிரிகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 81 வாலிபர் பங்கேற்றனர். படுக்கா புத்வா பணித்தளத்தில் நடைபெற்ற வேதபாட வகுப்பில் 80 விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் உள்ள வாலிபர் சந்திக்கப்படவும், அவர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.
செப் 28 ரபிகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகiயில் 65 பெண்கள் கலந்துகொண்டனர். சகோதரி மம்தா கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, தரிஹட் பணித்தளத்தில் நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 70 விசுவாசிகள் பங்கேற்றனர்; இக்கூட்டங்களில், சகோ. ஹென்றி மற்றும் சகோ. விஜய்குமார் ஆகியோர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். இக்கூட்டங்கள், விசுவாசிகளின் ஜெப வாழ்க்கையில் மிகுந்த ஊக்கத்தையும் பெலத்தையும் அளித்தன. மலைப் பகுதியில் உள்ள பணித்தள கிராமங்களுக்கு நல்ல சாலை வசதிகளை அரசாங்கம் அமைத்துத்தர ஜெபிப்போம்.
செப் 29 கம்ஹரியா கிராமத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியத்தின் மூலமாக 13 பேருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். நவாட்டா பணித்தளத்தில் ஊழியத்திற்கு உண்டாகிவரும் எதிர்ப்புகள் நீங்கவும், எதிர்ப்பாளர்களை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.
செப் 30ராம்டிஹரா, சர்கி, சல்மா, லுக்கா மற்றும் திலோக்கர் பணித்தளங்களில் செயல்பட்டுவரும் தையற் பயிற்சி மையங்கள் வாயிலாக, பெண்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை உண்டாக்கவும், கிறிஸ்துவை அவர்கள் மூலமாக சமுதாயத்திற்கு அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்துவருகிறார். இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் பெண்களுக்காக ஜெபிப்போம்.
