Translate

Feb 2026

 


பிப்ரவரி 24
பீஷ்ராம்பூர், டெஹ்ரி, பாரூன், கமரியா, ரத்துபிஹா, கருவந்தியா, கர்மா, நிம்மியாடி, தன்சா மற்றும் சடுக்கி ஆகிய பணித்தளங்களின் ஜெம்ஸ் பகற் பாதுகாப்பு மையங்கள் மற்றும் சமுதாய மையங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக 1300-க்கும் அதிகமான சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவித்து, அவர்களது குடும்பங்களுக்காக ஜெபிக்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளங்களில் தொடர்ந்து செய்யப்பட்டுவரும் சுவிசேஷப் பணிகளுக்காகவும் மற்றும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 25 கருவந்தியா ஜெம்ஸ் மருத்துவ மையத்தின் மூலமாக படியாபாக், அம்ரிடோலா மற்றும் கூபா ஆகிய கிராமங்களின் 45-க்கும் அதிகமான மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையினை வழங்கவும், அத்துடன் கிராம மக்கள் மத்தியில் சுகாதாரத்திற்கடுத்த விழிப்புணர்வினை அளிக்கவும் மற்றும் கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் உதவிசெய்தார். பணித்ளதங்களில் நடைபெற்றுவரும் மருத்துவ முகாம்களுக்காக ஜெபிப்போம்.

பிப்ரவரி 26 திலௌத்து பணித்தளத்தில் லத்தௌர் சமுதாயத்தைச் சேர்ந்த 40 பேர் தொடர்ந்து ஆலய ஆராதனையில் பங்குபெற்றுவருகின்றனர்; தேவனுக்கே மகிமை! பஞ்சாரி பணித்தள ஆலயத்திற்குச் செல்லும் சாலை அரசினால் சீரமைக்கப்பட்டுள்ளது. திலௌத்து பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஆலயச் சுற்றுச் சுவர் பணிகளுக்காகவும், நவாட்டா பணித்தளத்தில் தொடர்ந்து காணப்படும் நிலப் பிரச்சனைகள் மாறவும் மற்றும் ரோஹ்தாஸ் பணித்தளத்தில் கல்லறைத் தோட்டத்திற்கான நிலம் வாங்கப்படவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 27 குளிர்காலத்தை முன்னிட்டு பணித்தளங்களில் 240 பேருக்கு இலவச கம்பளிகளை வழங்கவும், 3500-க்கும் அதிகமான ஜனங்களுக்கு உணவளிக்கவும், கிறிஸ்துவை அறிந்துகொள்ளும் ஆர்வமுடைய சுமார் 200 பேருக்கு இலவசமாக வேதாகமங்களை வழங்கவும் கர்த்தர் உதவிசெய்தார். கிராமங்களில் சுவிசேஷத்திற்கான வாசல்கள் திறக்கப்படவும், சுவிசேஷத்திற்குக் காணப்படும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 28 சிக்காரியா கோட்டத்திற்குட்பட்ட பணித்தளங்களில் காணப்படும் எதிர்ப்புகள் மாறவும், கப்பர்புட்டி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்கான நிலம் விரைவில் வாங்கப்படவும், தன்சா மற்றும் சடுக்கி பணித்தளங்களின் ஜெம்ஸ் சமுதாய மையப் புனரமைப்புப் பணிகளுக்காகவும், படுக்காபுத்வா பணித்தளத்தின் பகற்பாதுகாப்பு மையக் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம். சகோதரி லலிதா தேவி மற்றும் சகோதரி கவிதா தேவி ஆகியோர் சரீர சுகம் பெற்று ஆராதனையில் தொடர்ந்து பங்குபெற்றுவருகின்றனர்; மேலும், ஒன்பது வருடங்களாக குழந்தையின்றியிருந்த சகோதரி ரேஷ்மா தேவிக்கு குழந்தை செல்வத்தைக் கொடுத்து கர்த்தர் ஆசீர்வதித்துள்ளார்; தேவனுக்கே மகிமை!